×

விஜய் சேதுபதி படம் மட்டும் நல்ல படமா? முரட்டுக்குத்து இயக்குனரின் கேள்வி!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பி கிரேட் படத்தை இயக்கிய இயக்குனர் இப்போது அதன் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கியுள்ளார்.

 

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பி கிரேட் படத்தை இயக்கிய இயக்குனர் இப்போது அதன் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சன்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் பலான படமாக உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. 2018ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில்  கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது. ஆனால் அந்த படம் பெரியவர்கள் ரசிக்கும்படி கூட இல்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவே நடித்துள்ளார் இயக்குனர். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி சலசலப்புகளை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் இயக்குனர் சந்தோஷ் தன் படம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பற்றி ‘இது பெரியவர்களுக்கான படம் என்று சொல்லிதான் வெளியிடுகிறோம். குழந்தைகள் பார்க்க கூடிய படம் இல்லை. அப்படி பார்த்தால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா கணவனுக்கு தெரியாமல் இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது போல காட்சிப்படுத்தி இருப்பார்கள். அது எல்லாம் சமுதாய சீர்கேடு இல்லையா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News