×

இங்க இருக்குறவங்கலாம் சொம்பைங்களா?- அடுத்த ஆட்டத்திற்கு ரெடியாகும் விஜயகாந்த்

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். புரட்சிகலைஞர் என்று அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் ரஜினி, கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்தவர்.
 

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். புரட்சிகலைஞர் என்று அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் ரஜினி, கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்தவர்.

பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த அவர் நடிகர் சங்க தலைவராக இருந்து சங்கத்தை கடனிலிருந்து மீட்டவர். பின்னர் தேமுதிக வை தொடங்கி எதிர்க் கட்சி தலைவராகவும் கலக்கியவர் விஜயகாந்த்.எம்.ஜி.ஆருக்கு பின் அரசியலில் பெரிய இடத்திற்கு வந்தவர் விஜயகாந்த் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே உள்ளார். அவரது கம்பீரமான குரலிலும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். பழைய குரலும் வந்துவிட்டதாம்,. இந்த தகவலை
அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரே கூறியுள்ளார். இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விஜயகாந்த் வருகை நிச்சயம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு கலக்கததை ஏற்படுத்தும் என்பது உண்மை. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News