×

விஜய்யின் அடுத்த பட இயக்குனர் ஒரு பாஜக பிரபலமா? அதிர்ச்சி முடிவு!

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தின் இயக்குனராக பேரரசு நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

 

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தின் இயக்குனராக பேரரசு நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய படங்களின் மூலம் தன் மீது கவனத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் பேரரசு. அதனால் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக அவர் நீண்டகாலம் நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் எடுத்த படங்கள் எல்லாம் ரசிகர்களின் பொறுமையைதான் சோதித்தன. இதனால் சீக்கிரமே அவர் பீல்ட் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாததால் இப்போது பாஜகவில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து ஏ ஆர் முருகதாஸ் விலகியதை அடுத்து இவர் அந்த படத்தை இயக்கலாம் என சொல்லப்படுகிறது. விஜய்யின் விருப்பப் பட்டியலில் மகிழ் திருமேனி மற்றும் பேரரசு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க உள்ளதால் ஏற்கனவே தனக்கு இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த பேரரசுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News