தமிழ் சினிமாவின் மாஸான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடையும் நிலையில் விஜய் அடுத்ததாக லோகேஷுடன் இணைய இருக்கிறார்.
ஏற்கெனவே விஜய்-லோகேஷின் தரமான சம்பவத்தை மாஸ்டர் படத்திலேயே பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர்கள் கூட்டணியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தளபதி -67 படத்தில் இணையும் நட்சத்திர பட்டாளங்கள் லிஸ்டை அவ்வப்போது சமூக வலைதளங்களில் காணமுடிகிறது.
இதையும் படிங்க : “சிவாஜி காலில் ஜெய்ஷங்கர் விழவேண்டும்”… அந்த சீனே இங்க கிடையாது… நடிகர் திலகம் செய்த அதிரடி காரியம்…
ஏற்கெனவே மலையாள நடிகர் ப்ரித்விராஜ், தெலுங்கு நடிகர் மேத்யூ தாமஸ், நிவின் பாலி, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிக்க நடிகைகளில் திரிஷா, விஜய்டிவி புகழ் மைனா நந்தினி, பிக்பாஸ் சீசன் 5ன் சாம்பியன் ராஜு ஆகியோர் நடிப்பதாக தினமும் செய்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன.
தளபதி – 67 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு தமிழ் பிரபல நடிகர் விஜயுடன் இணைகிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஷால் தான் அந்த நடிகர். சமீபகாலமாகவே விஷாலுக்கு எந்த படமும் அந்த அளவுக்கு சரிவர போகாத நிலையில் தளபதி – 67ல் அவர் நடிக்கிறார் என்ற தகவல் மட்டும் வெளியாகி இருக்கின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் புரியும்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…