×

விஷ்ணு விஷாலின் காதலுக்கு விஷால் தான் காரணமா? மனம் திறந்த நடிகர்!

ஜ்வாலா கட்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் மனம் திறந்துள்ளார். தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் விஷ்ணு விஷால். 

 

இவர் நடித்த முண்டாசுபட்டி, ஜீவா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. மேலும் இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தற்போது காடன், எஃப்.ஐ.ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவும் காதலித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜ்வாலா கட்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து விஷ்ணு இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அவர்களின் முதல் சந்திப்பு பற்றி கேட்டதற்கு, ''நடிகர் விஷாலின் சகோதரிக்கு திருமண சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தான் ஜ்வாலா கட்டாவை முதல் முறை சந்தித்தேன்'' என தெரிவித்துள்ளார். மேலும் ராட்சசன் திரைப்படம் தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News