அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கவிருந்த படம் டிராப்பா?... விஷ்ணு விஷால் அறிக்கை!
Aug 11, 2026, 19:18 IST
'ஆரியன்' படத்துக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆனப் படம் 'கட்டா குஸ்தி 2'. செல்லா அய்யாவு இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று ஹிட்டானது.
இதையடுத்து விஷ்ணு விஷால், 'கனா' படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது.
இதை விஷ்ணு விஷாலே தனது 'விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்' மூலம் தயாரிப்பதாகவும் இருந்தது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
A note from producer Vishnuu Vishal. pic.twitter.com/Bwp82D7Y3E
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) August 11, 2026
இந்நிலையில், இன்று விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜுடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் காரணமாக இப்படத்தை தொடர வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.