×

’மாநாடு’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜாதான் ஹீரோவா? பரபரப்பு தகவல்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இன்று காலை வெளிவந்த அப்டேட்டில் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, டேனிய்டல் ஆகியோர் இணைந்து இருப்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் இந்த நால்வரில் எஸ்ஜே சூர்யா தான் இந்த படத்தின் வில்லன் என்பது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மெர்சல் மற்றும் ஸ்பைடர் படங்களில் வில்லனாக நடித்த நிலையில் தற்போது மாநாடு படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சிம்பு இந்த படத்தில் ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது கேரக்டரின் பெயர் அப்துல் காலிக் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அப்துல் காலிக் என்ற என்ற பெயர் யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து எடுத்தது என்பது தெரியவந்துள்ளது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் சங்கர் ராஜா தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றியிருந்தார். இந்த பெயர் தான் தற்போது சிம்புவின் கேரக்டர் பெயர் ஆக மாறியுள்ளதை அடுத்து யுவன் பெயர் தான் இந்த படத்தின் ஹீரோ பெயர் என்று என்று மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்துக்கு இசையமைத்து வரும் யுவன்சங்கர் ராஜா மூன்று பாடல்களை ஏற்கனவே கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் இன்னும் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் எட்டாம் தேதி முதல் கோவையில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News