STR49: சிம்புவ விடவே மாட்டேன்.. கோபத்தில் தயாரிப்பாளர்.. அப்செட்டில் வெற்றிமாறன்...
நடிகர் சிம்புவுக்கு இப்போது நேரம் சரியில்லை போல. அவரின் 10 தல படம் வெளியாகி 2 வருடங்கள் கழித்து கமலுடன் இணைந்து நடித்த தக் லைப் படம் வெளியானது. இந்த படம் ஹிட்டடிக்கும் என்கிற ஆசையில் சிம்பு ஆர்வமுடன் நடித்தார். ஆனால், படமோ நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.
சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்:
அடுத்து அவரின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனும், 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்துவும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிம்புவின் 49வது படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பட வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தின் புரமோ வீடியோ வருகிற 16ம் தேதி வெளியாகும் என்கிறார்கள். அதோடு, அடுத்தநாளில் இருந்தே ஷுட்டிங்கும் துவங்கவுள்ளது.
சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள்:
சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஆகவே ஆகாது. ஏதேனும் ஒருவகையில் தயாரிப்பாளருக்கு சிம்பு குடைச்சல் கொடுப்பார். ஷூட்டிங்கிற்கு சரியாக போகமாட்டார். பாதி படம் நடித்துவிட்டு பேசிய சம்பளத்தை விட அதிகமாக கேட்பார். சம்பள பாக்கி இருந்தால் நடிக்க வராமல் டிமிக்கி கொடுப்பார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தயாரிப்பாளர் சங்கத்தில் இவர் மீது பல புகார்கள் இருக்கிறது.
சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷும் ஒருவர். ஐசரி கணேஷ் எந்த நடிகரை வைத்து படம் எடுத்தாலும் அவர்களை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை எடுப்பார். மாநாடு படத்திற்கு பின் சிம்புவை வைத்து கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்தார். அதன்பின் அடுத்த படத்திற்கு 4 கோடி வரை சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் சிம்புவோ ஞானவேல் ராஜா தயாரித்த பத்து தல படத்தில் நடிக்கப் போனார்.

நீதிமன்றத்துக்கு போன ஐசரி கணேஷ்:
ஐசரி கணேஷ் பலமுறை சிம்புவிடம் கால்ஷூட் கேட்டும் கொடுக்கவில்லை. எனவே நீதிமன்றத்தில் சிம்புவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் சிம்புவுக்கு 4 கோடி கொடுத்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்பதால் சிம்பு தரப்பில் ஒரு கோடியை மட்டுமே திருப்பி கொடுப்பதாக சொல்ல ஐசரி கணேஷ் கடுப்பானார்.சிம்பு தக் லைப் படத்தில் நடித்துவிட்டு தற்போது வெற்றிமாறன் படத்தில் நடித்த தயாராகி விட்டார்.
ஒருபக்கம் ஐசரி கணேஷிடம் பேசிய சிம்பு ‘வழக்கை வாபஸ் வாங்கி விடுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு கால்ஷூட் கொடுக்கிறேன்’ என சமாதானம் சொல்ல அவரும் வழக்கை வாபஸ் வாங்கி விட்டார். ஆனால் சிம்பு சொன்னதை செய்யவில்லை. தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க சிம்பு தயாராகி விட்டார்.
சமாதனம் பேசப்போன வெற்றிமாறன்:
நமது படம் வெளியாகும் போது ஐசரி கணேஷ் பிரச்சனை கொடுத்தால் என்ன செய்வது என யோசித்த வெற்றிமாறன் தாணுவையும் அழைத்துக் கொண்டு அவரை நேரில் சந்தித்து சமாதானம் பேசி இருக்கிறார். ‘உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள். சிம்புவுடன் பேசி நான் வாங்கி கொடுக்கிறேன். பணம் இல்லை என்றால் கண்டிப்பாக உங்கள் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பார்’ என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். ஆனால் ஐசரி கணேஷ் சமாதானம் ஆகவில்லையாம். ‘பொய் சொல்லி ஏமாற்றி வழக்கை வாபஸ் வாங்க வைத்து சிம்பு என்னை ஏமாற்றி விட்டார். அவரை விடவே மாட்டேன்’ என கோபம் காட்டியிருக்கிறார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியை இன்னும் வெற்றிமாறன் விடவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
