சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

 
சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை வரும். அல்லது சிம்புவால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒரு ஒரு தயாரிப்பாளர் மூலம் படத்திற்கு பிரச்சனை வரும். இது பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக சிம்பு நடிக்கும் எல்லா படங்களும் பிரச்சனையை சந்திக்கும். சிம்பு மாறும் வரை இது மாறப்போவதில்லை.

இந்நிலையில்தான், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்துவரும் அரசன் படமும் இந்த பிரச்சனையை சந்தித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிப்பில் 3 படங்கள் நடிப்பதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கினார் சிம்பு. ஆனால், வெந்து தணிந்தது காடு என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

அதன்பின் கோகுல் இயக்கத்தில் கொரொனா குமாரு என்கிற படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டார். சில கோடிகள் செலவு செய்து செட் எல்லாம் போட்ட நிலையில் அந்த படத்திலிருந்து சிம்பு பின்வாங்கினார். எனவே, சிம்புவுக்கு கொடுத்த 5 கோடி அட்வான்ஸ் மற்றும் செட்டுக்கான செலவு மற்றும் வட்டி என எல்லாம் சேர்த்து 12 கோடி கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், சிம்புவோ நான் 5 கோடி மட்டுமே கொடுப்பேன் என்கிறார். இந்நிலையில்தான், FEFSI மூலம் அரசன் படப்பிடிப்பை ஐசரி கணேஷ் நிறுத்திவிட்டார். இந்த பிரச்சனை எப்போது தீர்ந்து படம் எப்போது துவங்கும் என்பது சிம்புவின் கையில்தான் இருக்கிறது. அனேகமாக, 7.5 கோடி கொடுத்து ஐசரி கணேசனுக்கு செட்டில்மெண்ட் செய்து படபிடிப்பு துவங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

From Around the web