isha
விளையாட்டு போட்டிகள் மூலமாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிராமப்புற இளைஞர்களுக்கான வாலிபால், த்ரோபால் போட்டிகள் ஈஷாவில் நடைபெற்றன.
ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் டிசம்பர் 31-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை ஆதியோகி முன்பு நடைபெற்ற இப்போட்டிகளில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 இளம் வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். ஆண்களுகளுக்கான வாலிபால் போட்டியில் 29 அணிகளும், பெண்களுகளுக்கான த்ரோபால் போட்டியில் 8 அணிகளும் பங்கேற்றன.
இந்த போட்டியின் இறுதியாட்டம் கடந்த ஜனவரி 8 -ஆம் தேதி அன்று ஆதியோகி முன்பு நடைபெற்றது. ஆட்டத்தின் முடிவில் வாலிபால் போட்டியில் மத்வராயபுரம் அணி முதலிடத்தையும், தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தையும் வென்றன.
isha
த்ரோபால் போட்டியில் புள்ளாக்கவுண்டன் புதூர் அணி முதலிடத்தையும், தேவாரயபுரம் அணி இரண்டாம் இடத்தையும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்கள் வெற்றி கோப்பையும், பரிசு தொகையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…