Categories: Cinema News latest news

ஊர் பக்கம் எப்போ வர்றிங்க..? அங்கேயே இருந்தா எப்படி…!விடுமுறையை கழிக்கும் ஐஸ்வர்யா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எதார்த்தமான நடிப்பால் தமிழ் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை. தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொண்டவர்.

நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார், அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைந்தது.

பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு தென்னிந்திய திரை அரங்கு நல்ல வரவேற்பும், விருதுகள் கொடுத்து அங்கீகாரமும் அளித்தது.

இவர் விஜய் சேதுபதியுடன் ரம்மி, தர்மதுரை, க/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இவர் தற்போது தனது விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர் பயணம் சென்றுள்ளார். அங்குள்ள நியாபகங்களை போட்டோ எடுத்து தமது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

வீடியோவை பார்க்க: https://www.instagram.com/reel/CaAAgqhJiBk/?utm_source=ig_web_copy_link

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini