குட்டிப்பாப்பா தோத்துடும்!.. குட்டி கவுனில் பிக் பாஸ் பிரபலம் பண்ணும் அட்ராசிட்டி!.
நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புதிய க்ளாமர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் மற்றும் மாடர்ன் தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். பலரும் அவரது அழகையும், ஃபிட்னஸையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா தத்தா, தமிழ் சினிமாவில் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'பாயும் புலி', 'ஆறாது சினம்', 'சத்ரியன்', 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன', 'மிலிர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது விஜய் டிவியின் 'பிக் பாஸ் தமிழ்' சீசன் 2 நிகழ்ச்சிதான். அந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறி ரன்னர்-அப் இடத்தைப் பிடித்ததும் அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் போட்டோஷூட்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா தத்தா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சியான மற்றும் ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
