படுமோசம்!.. பாலி தீவுன்னு நம்பிப் போயிடாதீங்க!..கிளாமர் போட்டோ போட்டு அலர்ட் செய்த ஐஸ்வர்யா மேனன்!..

சித்தார்த், அமலாபால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா என பல படங்களில் நடித்தாலும் தமிழ் படம் 2 தான் அவருக்கு ஹீரோயின் அந்தஸ்தை பெற்று தந்தது.

அந்தப் படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் சரியாகப் போகவில்லை. அதன் பின்னர் அசோக் செல்வன் நடித்த வேழம் படத்தில் நடித்தார்.தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கிலும் ஐஸ்வர்யா மேனனுக்கு படங்கள் குவிந்தன. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்காமல் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன் மம்முட்டி நடித்து வரும் பஸுக்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.3.2 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள ஐஸ்வர்யா மேனன் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் பாலி தீவுக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.பாலித்தீவு அனைவரும் சொல்வது போல சிறப்பான அனுபவத்தை தனக்கு கொடுக்கவில்லை. ரொம்பவே சுமார்தான். ஆனால், அங்கே முக்கியமாக அனைவரும் விரும்பி செல்லும் ஊஞ்சலில் விளையாடிய புகைப்படங்கள் நல்லா வந்த நிலையில் அதை இங்கே போஸ்ட் செய்திருக்கிறேன் என ரசிகர்களுக்கு கண் குளிர விருந்து கொடுத்துள்ளார்.

Related Articles

Next Story