×

கூட்டம் கூட்டமாக போக இது ஒன்னும் வெகேஷன் இல்லை!  கடுப்பான நடிகர்...

கூட்டம் கூட்டமாக போக இது ஒன்னும் வெகேஷன் இல்லை!  கடுப்பான நடிகர்...
 

"சீனாவை விட இத்தாலியில் அதிகம் உயிரிழப்பு வர காரணம் அறியாமையில் வெளியில் சுத்துன அப்பாவி மக்கள் தான். இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிட கூடாது. Social Distancing - ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் இருந்து ஒரு மீட்டராவது விலகியே இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். வெளியில் போய் வந்தால் கை கால்கள் கழுவ சொல்கிறார்கள். கழுவாத கையால் முகத்தை தெரியாமல் கூட தொட்டுவிடவேண்டாம் என்கிறார்கள்."

" எல்லா இருமலும், எல்லா காய்ச்சலும் கொரோனா கிடையாது. இருந்தாலும் ஐந்து நாள் ஆறு நாள் தனிமைப்படுத்தி பார்த்துவிட்டு அதன் பிறகும் இருந்தால் மருத்துவரை அனுக சொல்கிறார்கள்."

"அத்யாவசிய தேவை என்றால் மட்டுமே வெளியில் போங்க. இல்லனா தயவு செய்து வெளியில் போக வேண்டாம். கூட்டம் கூட்டமாக வெளியில் செல்ல இது vacation டைம் இல்லை. பாதுகாப்பாக குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம்."

"10 நாளில் 150 ஆக இருந்த எண்ணிக்கை, 24 மணி நேரத்தில் 250ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரிப்பதால் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை தனிமை படுத்திக்கொள்ளாமல் வெளியில் ரயிலிலோ அல்லது திருமணத்திற்கோ சென்றால் அவரை சுற்றி இருக்கும் அத்தனை பேரும் பாதிக்க படுவார்கள். அப்படி ஒரு மன்னிக்க முடியாத தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

"பயப்படவேண்டிய விஷயத்திற்கு பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம் என சொல்வார்கள். கொரோன வைரஸ் தடுக்க அடுத்த இரண்டு வாரம் முக்கியமானது என்று சொல்றாங்க. எச்சரிக்கையுடன் இருப்போம்" என சூர்யா பேசியுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News