நடிகர் விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ. இவர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்தவர். இவர் பல தொழில்களையும் செய்து வருகிறார்.
சீன நிறுவனமான ஷாவ்மி(Xiaomi) என்கிற நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை முதல் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள சேவியர் பிரிட்டோவின் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பே விஜயை குறிவைத்து சில முறை வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த போது அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்று வருமான வரிசோதானை நடத்தப்பட்டது. எனவே, இந்த முறையும் இந்த சோதானை விஜய்க்கு செக்கா என்பது தெரியவில்லை.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…