×

ஐ.டி. மாப்பிள்ளை வேண்டாம்.. விவசாயிதான் வேண்டும்....இப்படி ஒரு இளம்பெண்ணா?.. 

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே முனியந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன். இவர் ஒரு விவசாயி. இவரின் மகள் அரசம்மாள். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். எனவே, அவருக்கு மாப்பிள்ளை பார்த்த போது, நான் விவசாயியைத்தான் திருமணம் செய்வேன் என தந்தையிடம் கூறிவிட்டார்.
 

எனவே, அதே பகுதியை சேர்ந்த வெறும் 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு விவசாயம் செய்து கொண்டிருக்கும் சிவகுமார் என்பவர் அவரை திருமணம் செய்ய முன் வந்தார். இதை, அரசம்மாளும் ஏற்றுக்கொண்டார்.  இருவீட்டாரின் சம்மதத்துடன் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. 

திருமண பரிசாக ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டர், கலப்பை ஆகிவற்றை அரசம்மாளின் தந்தை மருமகனுக்கு வழங்கியுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அரசம்மாள் ‘ஐடி. துறையில் பணிபுரிந்து அடிமையாய் வாழும் மணமகன் எனக்கு தேவையில்லை. அவர்களின் வேலையும் நிரந்தரமில்லை. நம் நாட்டிற்கு தேவை விவசாய தொழில்தான். எனவேதான் ஒரு விவசாயியை திருமணம் செய்தேன்.  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக நான் முதல் அடி எடுத்து வைத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News