Connect with us
Sivaji

Cinema News

ஆன்ட்டி ஹீரோவை பிரபலமாக்கியவர் நடிகர் திலகம் தான்… பத்மினி படத்தில் அப்படி ஒரு மோசமான வேடமா?

‘பராசக்தி’ வெளியானதும் நடிகர் திலகம் சிவாஜி தமிழ்சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாகி விட்டார். அதன்பிறகு 3 படங்களும் நடித்து விட்டார். 5வது படத்திற்காக சிவாஜியிடம் கதை சொல்ல வர்றாங்க. நீங்க தான் ஹீரோன்னு சொல்றாங்க. கதையை கேட்டு முடிச்சா சிவாஜியோட ரோல் என்னன்னு கேட்டா, டென்ஷன் ஆயிடும்.

இதையும் படிங்க… திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்!. என்னா?!.. ஐ.டி.ரெய்டு அதிகாரிகளிடம் எகிறிய கேப்டன்!..

படத்துல ஹீரோ ஒரு பெண் பித்தன். நல்ல விஷயங்களே இல்லாத ஒரு மனுஷனா ஹீரோ இருக்கிறார். கதையைக் கேட்டதும் சிவாஜி என்ன சொல்லி இருப்பாரு? நமக்கு எல்லாம் முடியாதுன்னு தான் சொல்லி இருப்பாருன்னு நினைக்கத் தோணும். அவரோ ஓகேன்னு சொல்லிட்டாரு.

முதல் படம் சமூகப்புரட்சி பண்ணி சிவாஜியை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது. ஆனால் இவரோ இந்த ரோலுக்கு ஓகேன்னு சொல்லி விட்டாரே. அப்படி யாராவது சொல்வாங்களா? இங்க தான் அந்த விதியையே உடைத்தெறிந்தார் சிவாஜி.

திரும்பிப்பார்னு ஒரு படத்துல நடிச்சி சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். அங்க ஆரம்பிச்சது சிவாஜியோட ஆட்டம். ஆன்ட்டி ஹீரோ என்ற வார்த்தையே அங்கிருந்து தான் பிரபலமானது.

அதுல இருந்து 8 மாசம் கழிச்சி ஒரு கதை சிவாஜிக்கிட்ட வருது. இந்தப் படத்துல நீங்க நாட்டையேக் காட்டிக் கொடுக்குற ஒரு ரோல்னு சொல்றாங்க. ஆனா உண்மையிலேயே சிவாஜி மிகுந்த தேசபக்தி உள்ளவர். ஆனாலும் அந்தக் கேரக்டரிலும் நடிக்க சம்மதித்தார். அது தான் அந்த நாள் படம்.

அந்தப்படத்துல நிறைய புதுமைகளை செய்து இருந்தார் சிவாஜி. அவரோட 12வது படம். 16வது படம் துளி விஷம். கே.ஆர்.ராமசாமி தான் ஹீரோ. சிவாஜி ஆன்ட்டி ஹீரோ. இந்தப் படத்திற்கு முன்பு தான் சிவாஜி மனோகரா என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் நடித்து இருந்தார்.

அதன்பிறகு சிவாஜிக்கு ஒரு படம் வந்தது. அது நண்பனின் மனைவியை அடையத் துடிக்கிற கேரக்டர். யாராவது நடிப்பார்களா? அதிலும் நடித்தார். அதுதான் கூண்டுக்கிளி. 19வது படம் எதிர்பாராதது. இதுல பத்மினி சித்தி முறை. ஒரு கட்டத்துல உணர்ச்சி வேகத்துல கட்டித்தழுவ முயற்சிக்கிறார்.

இதையும் படிங்க… ‘எஜமான் காலடி மண்ணெடுத்து’னு பாடுனா மட்டும் போதுமா? இறங்கி செஞ்சாருல விஜய்.. ஆவேசத்தில் அந்தணன்

அதைப் பொறுத்துக்க முடியாத பத்மினி அவரை அடித்து நொறுக்கி விடுவார். அப்படிப்பட்ட வில்லங்கமான கதையிலும் துணிச்சலாக நடித்தார் சிவாஜி. பெண்ணின் பெருமை, ரங்கோன் ராதா, கௌரவம், உத்தமபுத்திரன், புதிய பறவைன்னு பல படங்களில் ஆன்ட்டி ஹீரோவா நடித்து அசத்தியிருந்தார் சிவாஜி.

 

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top