×

அப்போ ரைசா என்னாச்சு? பிரியா பவானி ஷங்கருடன் நெருக்கமாக ஹாரிஷ் கல்யாண்!

ஹாரிஷ் கல்யாணுடன் நெருக்கமாக பிரியா பவானி ஷங்கர்

 

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பின்னர் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார். இதையடுத்து பியார் ப்ரேமா காதல், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு ஆன்லைன் ப்ளாட்ஃபார்மில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் அவ்வப்போது ரைசா  வில்சனுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஹரிஷ் கல்யாண் இன்ஸ்டாகிராமில் நடிகை பிரியா பவானி ஷங்கருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு காதல் வசனத்துடன் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஆனால், இவர்கள் இருவரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2016ல் வெளியாகி சக்கை போடு போட்ட பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளனர். அந்த படத்திற்காக எடுக்கப்பட்டது தான் இந்த ரொமான்டிக் கிளிக்ஸ்... ஆனால், அதுக்குள்ள ஊருக்குள்ள என்னென்னமோ கத கட்டிட்டாங்க.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News