×

பிரா வெளியே தெரிவது அவமானமல்ல- நடிகை ஆதங்கம் !

பொதுவெளியில் பெண்களுக்கு தெரியாமல் அவர்களது பிரா வெளியே தெரிவது அவமானது அல்ல என்று நடிகை ராதிகா மதன் தெரிவித்துள்ளார்.

 

MTV "Baar Bra Dekho" என்ற நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. அதில் பெண்களின் உள்ளாடையான பிரா வெளியே தெரிவது ஒன்றும் அவமானகரமானது இல்லை என்று கலந்து கொண்ட தொலைக்காட்சி நடிகை ராதிகா மதன் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ’பெண்கள் பொதுவெளியில் பல வழிகளில் ஸ்டாக்கிங் மற்றும் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் அவளின் பிரா ஸ்ராப் பொதுவெளியில் அவளுக்கே தெரியாமல் வெளியே தெரிந்தாலும் அந்த பெண்ணை தவறாகப் பேசும் மக்கள் இன்றளவும் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆடைகளை வைத்து ஒருவரை தீர்மானிக்கக் கூடாது. ஒருவருக்கு எந்த ஆடை சௌகர்யமாக இருக்கிறதோ அதை அணியட்டும். ’ எனக் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News