Categories: Cinema News latest news throwback stories

நல்லவனா இருந்தா மட்டும் போதாது…. வல்லவனாவும் இருக்கணும்… கண்ணதாசனின் எழுத்தில் எவ்வளவு அற்புதம்?!

ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு நாம் நல்லாருக்குன்னு சொல்லிட்டு அதைக் கடந்து போயிடுறோம். ஆனா அந்தப் பாட்டின் வரிகளில் உள்ள நுட்பத்தைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில் கண்ணதாசனின் இந்தப் பாடல் பற்றிப் பார்ப்போம்.

‘படித்தால் மட்டும் போதுமா’ படத்தில் வரும் பாடல் இது. சிவாஜி, பாலாஜி, ரங்கராவ், எம்ஆர்.ராதா, சாவித்திரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நல்லவன் எனக்கு நானே நல்லவன்னு ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடலின் சூழல் என்ன? சிவாஜி நல்லவர். அவரது ஒண்ணுவிட்ட அண்ணனான பாலாஜி சூழலால் ஒரு சின்ன தவறு பண்ணிடுறாரு.

இதையும் படிங்க… நான் மட்டும் என்ன சொம்பையா?!.. எஸ்.கே. ரேஞ்சுக்கு சம்பளத்தை ஏத்திய தனுஷ்!..

இந்தத் தவறு தான் படத்தில் வர்ற பிரச்சனைகளுக்குக் காரணம். தம்பிக்குப் பொண்ணு பார்க்கப் போறாங்க. அந்தப் பொண்ணு நல்லா இருக்கறதால ஒரு லட்டரை மாற்றி எழுதி அந்தப் பொண்ணைத் தான் கட்டிக்குவாரு. அதுக்குப் பிறகு நிறைய பிரச்சனைகள் வரும். டிஎம்எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எல்.ராகவன்னு 3 பேரு பாடியிருப்பாங்க. மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. இசை அமைத்துள்ளார். மலைவாழ் மக்கள், பாரம்பரியமிக்க குடும்பங்களின் பிரச்சனைகள் இரண்டையும் அழகாக வடிவமைத்திருப்பார் கண்ணதாசன்.

நல்லவனுக்கும், ரொம்ப நல்லவனுக்கும் வித்தியாசம் காட்டியிருப்பார் கண்ணதாசன். முதலில் பாலாஜிக்கு ஸ்ரீனிவாஸ் பாடியிருப்பார். நல்லவன் எனக்கு நானே நல்லவன். சொல்லிலும் செயலிலும் நல்லவன் என்று பாடியிருப்பார். சிவாஜிக்கு டிஎம்எஸ் பாடுவார்.

உள்ளம் சொல்வதை மறைத்தவனில்லை. ஊருக்குத் தீமை செய்தவனில்லை. வல்லவன். ஆயினும் நல்லவன் என்று அழகாக பாடியிருப்பார். அதாவது மனசாட்சிப்படி நான் செயல்படக்கூடியவன். யாருக்கும் கெடுதல் செய்தது கிடையாது. நான் முரடன் தான். ஆனாலும் ரொம்ப நல்லவன் என்று சொல்லியிருப்பார்.

பாடல் வரிகள் எங்கும் இந்த நல்லவன், ரொம்ப நல்லவனுக்கும் இடையே வித்தியாசம் காட்டியிருப்பார். உற்றுக் கவனித்தால் தெரியும். பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை என்று சிவாஜி பாசத்துக்குக் கட்டுப்பட்டவர் என்று சொல்லி இருப்பார். அதே நேரம் பாலாஜி என் கண்ணை நானே கண்டேன். அதில் என்னை நானே கண்டேன் என்று இருபொருள்பட பாடியிருப்பார்.

இதையும் படிங்க… 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் ஆங்கர் விஜய் சாரதி! மீண்டும் மீடியா பக்கம் வராததற்கு இதுதான் காரணமா?

அதாவது என் எண்ணப்படி நான் செய்தது எல்லாம் சரி. எனக்கு நான் நல்லவன் என்று சொல்வார்களே அப்படித்தான். இன்னொரு பொருள் என் கண் என்றால் சாவித்திரி. அவள் உள்ளம் முழுவதும் நான் தான் நிறைந்துள்ளேன் என்கிறார். கடைசியில் தூய உள்ளம் வேண்டும் என்று நல்லவன் கேட்பதாக பாடல் முடிவது அருமை.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 

ராம் சுதன்
Published by
ராம் சுதன்