×

கொரோனாவிற்கு இது தான் பாதுகாப்பான இடம்... சன்னி லியோன்!

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களால், அதன் பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் நடிகை சன்னி லியோன் குடும்பத்துடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு பறந்துள்ளார். தனது குழந்தைகளை கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமிகளிடமிருந்து பாதுகாக்க, இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். சன்னி லியோன் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து மும்பையில் கணவர், மகள் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார்.

அடிக்கடி தனது குழந்தைகளுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடும் இந்த  38 வயது நடிகை கூறும்பொழுது '"வீடு மட்டும் தோட்டத்துடன் கூடிய இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் வீடு கொரோன நேரத்தில் மிகவும் பாதுகாப்பானது. எனது தாயார் இருந்திருந்தால் இதை தான் விரும்பி இருப்பார்" என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News