அஜீத் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தற்போது சில காரணங்களால் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரீலிஸாக இன்னும் சில வாரங்களே உள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து, அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் என மூவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இது, அஜித்தின் 63வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வலிமை படத்தைவிட ஆக்சன் காட்சிகள் கம்மியாக ஓர் சமூக பிரச்சனையை முன்னிறுத்தி படமாக்கப்பட உள்ளதாம்.
இப்படத்தில், பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். ஆம்.. அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.
பின்னர், இது வெறும் வதந்தி எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று வெளியான கோலிவுட் வட்டார செய்திகளில் அஜித்குமாரின் 61வது திரைப்படத்தில் மோகன்லால், நாகர்ஜுனா, அதிதி ராவ், தபு என பலர் நடிக்கின்றனராம்.
இதையும் படியுங்களேன்- அந்த தெரு எத்தனை கோடினு கேளு.! உச்சாணி கொம்பில் தியேட்டர் ஓனர்கள்.!
இந்த செய்திகளில், எது உண்மை என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த தகவல்களை அஜித்குமார் தரப்பு தான் உறுதிப்படுத்த வேண்டும்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…