Connect with us
jaya

Cinema News

ஜெயலலிதாவை குழந்தைப்பருவத்திலேயே துல்லியமாகக் கணித்த ஜோதிடர்…யாருன்னு கேட்டா அசந்துருவீங்க…!

சினிமாவில் மட்டுமல்ல…அரசியலில் தனக்கென்று தனி இடம். எம்ஜிஆரின் அரசியல் வாரிசு. அவருடன் இணைந்து 28 படங்கள் நடித்துள்ளார். பள்ளிப்பருவத்தில் பல இன்னல்கள்…திரையுலகில் பல சாதனைகள்…அரசியலில் வெற்றி…தமிழக முதல் அமைச்சராக இவருக்கு பல சோதனைகள்…

இவருக்குக் கிட்டிய வெற்றிகள் என பலவற்றை தன்னகத்தேக் கொண்டுள்ளார். இவர் மறைந்தாலும் மக்களால் நான்..மக்களுக்காக நான் என்ற இவரது பொன்மொழி நம் நெஞ்சை விட்டு ஒரு போதும் அகலாது. 7 மொழிகள் தெரிந்தவர். அவர் தான் இரும்பு மனுஷி என்று எல்லோராலும் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா. இன்று (24.02.2023) இவருக்கு 75வது பிறந்த நாள்…தன்னுடைய குழந்தைப் பருவம் மற்றும் பெற்றோர்கள் பற்றி ஒரு முறை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

என்னுடைய குடும்பப் பின்னணிக்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. என் குடும்பத்தில் உள்ளவருக்கும் அரசியலில் எவ்வித ஆர்வமும் இல்லை. இனிய பருவம் என்றால் எந்த வித பொறுப்புகளும், கவலைகளும் இல்லாத குழந்தை பருவம் தான்.

Jayalalitha

அப்படி 4 வயது வரை நான் இருந்திருக்கிறேன். 4 வயசுக்கு மேலே நான் டிசிப்பிளினோட தான் வளர்ந்தேன். காலையிலேயே 5 மணிக்கு எழுந்திருக்கணும். அப்புறம் பாட்டு வாத்தியார் வருவாரு.

கர்நாடக சங்கீதம், வாய்ப்பாடு நடக்கும். அப்போ ஸ்கூல் நாலே கால் மணி வரை இருக்கும். ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்த உடனேயே நடனம் கத்துக் கொடுக்க 2 வாத்தியார்கள் வந்தாங்க.

அப்புறம் ஹோம் ஒர்க். அதை முடிச்சிட்டு களைச்சிப் போய் படுத்துருவோம். மறுபடியும் காலை எழுந்து வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சிடுவோம். நான் தாயார விட தாத்தா பாட்டியோட தான் அதிக காலம் வாழ்ந்துருக்கேன்.

எனக்கு 2 வயது இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். அதுக்கு அப்புறம் 4 வயது இருக்கும்போது சென்னை வந்தேன். சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சேன். பெங்களூருல தாத்தா பாட்டி இருந்தாங்க.

அதனால அவங்களோட கண்காணிப்புல வளர்ந்தா நல்லாருக்கும்னு எங்க அம்மா முடிவெடுத்தாங்க. கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். பெரியவங்களுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்கணும். அவங்க என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசக்கூடாது.

பொதுவா எந்தக்குழந்தையும் முதன் முதலா பேசத் தொடங்கும்போது அம்மா என்று தான் சொல்லும். ஆனால் நான் முதன் முதலாக அம்மு என்று சொன்னேனாம். அதனால அதையே எனக்கு செல்லப்பெயராக வைத்து விட்டார்கள்.

பொதுவாக 2 வயது குழந்தைக்கு எதுவுமே நினைவில் இருக்காது என்று சொல்வார்கள். ஆனால் ஒன்று மட்டும் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அடிக்கடி ஒரு திரைப்படம் பளிச்சிடுவது போல இந்தக் காட்சி என் மனதில் தெரியும். ஒரு பெரிய வீடு. அதில ஒரு பெரிய வராண்டா. போர்டிகோவில் ஒரு கருப்பு நிற கார்.

காரின் பின் கதவு திறந்திருக்கிறது. பின் சீட்டில் ஒரு உடல் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டு உள்ளது.

என் தாயார் ஒரு சிகப்பு நிற சேலையைக் கட்டிக் கொண்டு என்னைத் தூக்கி வைத்திருக்கிறாள். பக்கத்தில் ஒரு வேலைக்காரன் லாந்தர் விளக்கைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். இதற்கு என்ன அர்த்தம் என்று என் தாயாரிடம் கேட்டேன்.

jayalalitha2

அது என் தந்தை இறந்த நாள். பின் சீட்டில் கிடந்தது அவரது உடல். என் தந்தைக்கு ஜோதிட சாஸ்திரம் நன்றாகத் தெரியும். நான் பிறந்ததும் என் தகப்பனார் தான் என் ஜாதகத்தைக் கணித்து எழுதினார். என் பொண்ணு அரசியல்ல பெரிய ஆளா வருவான்னு அப்பவே பெருமையா சொல்வார்.

பெண் அரசியல்வாதி விஜயலட்சுமி பண்டிட் பாப்புலராக இருந்த காலம். அப்போது அவரது பெயரைச் சொல்லி என் பொண்ணு விஜயலட்சுமி பண்டிட் மாதிரி வருவான்னு அப்பா சொல்வாரு.

அம்மா ஆரம்பத்துல சாதாரண குடும்பத்தலைவியாகத் தான் இருந்தாங்க. சாதாரண குடும்பத்தலைவி என்பதை விட என் தாயார் சகலகலா வல்லி. கலை மேதை என்று தான் சொல்ல முடியும்.

என் தாயார் மிகவும் நன்றாகப் பாடுவார். இனிமையான குரல்வளம் உடையவர். அருமையாக வீணை வாசிப்பார். நன்றாக வயலின் வாசிப்பார்.

Continue Reading

More in Cinema News

To Top