Categories: Cinema News latest news

அச்சச்சோ ஜாக்கி சான் படத்துக்கு இப்படியொரு டைட்டிலா?.. அந்த வயசான தோற்றம் படத்துக்கான கெட்டப்பா?..

சாகச நாயகன் ஜாக்கி சான் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், சமீபத்தில் வயதான தோற்றத்தில் வெளியான தனது புகைப்படங்களை பார்த்து பலரும் வருத்தப்பட்டனர். எப்படி இருந்த ஜாக்கி சான் இப்படி ஆகிட்டாரே என அனைவரும் ஷாக் ஆகி அன்பை செலுத்தினர்.

ஆனால், அது அடுத்த படத்துக்கான கெட்டப் தான் என்றும் அந்த கெட்டப்பிலேயே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் அப்படி எல்லாரும் நினைத்து விட்டனர். 70 வயதிலும் நான் ரொம்பவே யங்காகவும் சூப்பராகவும் இருக்கிறேன் என சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு பேட்டியளித்துள்ளார் ஜாக்கி சான்.

இதையும் படிங்க: ஜாக்கெட் எங்கேம்மா காணோம்!.. காவியாவை பார்த்து கலாய்த்து தள்ளும் ஃபேன்ஸ்!.. இவங்கதான் இந்திராணியாம்!

ஜாக்கி சான் பிறந்தநாள் பரிசாக அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படத்தின் போஸ்டரையும் தற்போது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார் ஜாக்கி சான். அந்த படத்தின் டைட்டிலை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் சட்டென ஷாக் ஆகி விட்டனர்.

லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்தை போல ஜாக்கி சான் தனது அடுத்த படத்துக்கு ’A Legend’ என டைட்டில் வைத்து துணிவு படத்தில் அஜித் வாட்டர் போட் ஓட்டுவது போல வானத்தில் பறந்துக் கொண்டே ஸ்கை போட் ஓட்டுவது போன்ற போஸ்டரை ஜாக்கி சான் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்களைக் கதறி அழவைத்த சிவாஜியின் அந்த ஏழு படங்கள்!.. மறக்க முடியாத பாசமலர்!..

இந்த வயதிலும் ரிஸ்க்கான ஆக்‌ஷன் காட்சிகளில் ஜாக்கி சான் எப்படி நடிக்கிறார் என்றும் உண்மையாகவே இவர் தான் ரியல் லெஜண்ட் என்றும் இந்த டைட்டில் ஜாக்கி சானுக்குத்தான்  பொருத்தமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M