×

மிருனாலினி ரவிக்கு அடித்த ஜாக்பாட் – முன்னணி நடிகரின் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு!

டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலமாக பிரபலமடைந்த மிருனாளினி ரவி இப்போது விஷாலுக்கு ஜோடியாக உள்ளார்.

 

டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலமாக பிரபலமடைந்த மிருனாளினி ரவி இப்போது விஷாலுக்கு ஜோடியாக உள்ளார்.

சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை சினிமாவில் நடிக்க வைக்கும் பழக்கம் சமீபகாலமாக அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது டப்ஸ்மாஷ் புகழ் மிருனாளினி ரவியும் இணைந்துள்ளார்.விஷால் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே விஷால் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்புக் கிடைத்தது குறித்து திரையுலகினர் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News