மொட்டை ராஜேந்திரன் வாய்ஸா? சௌந்தர்யாவுக்காக தரமான பதிலடி கொடுத்த ஜாக்குலின்
விஜே ஜாக்குலின்: விஜய் டிவியில் பல வருடங்களாக விஜேவாக பணியாற்றி வருபவர் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ஜாக்குலின் அதன் பிறகு விஜய் டிவி பக்கமே அவரை பார்க்க முடியவில்லை. பிரியங்கா, மாகாபா இவர்களைப் போல் ஜாக்குலினும் ஒரு பெரிய தொகுப்பாளினியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஒரு கட்டத்தில் ஜாக்குலினையும் ரக்ஷனையும் சேர்த்து கிசுகிசுக்களும் வந்தன. இருந்தாலும் இருவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இரண்டாவது இடம்: பிரியங்காவை போல ஜாக்குலினுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் 8 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஜாக்குலின். மக்களின் அபிமானங்களை பெற்ற ஜாக்குலின் கடைசி வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் சௌந்தர்யா. இவருடைய தனித்துவமே இவருடைய குரல்தான் .
கரகரப்பான குரல்: கரகரப்பான குரல் தன்மையை பெற்ற சௌந்தர்யா இந்த குரலாலேயே எனக்கு சில சமயங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கிறது என வருத்தப்பட்டதும் உண்டு. கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த விஷ்ணு இந்த சீசனில் சிறப்பு அழைப்பாளராகவந்தபோது சௌந்தர்யாவுக்கு ஒரு க்யூட்டான ப்ரொபோஸ் செய்து அசத்தியிருப்பார். இப்போது அவர்கள் திருமணமும் கூடிய சீக்கிரம் நடைபெறும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
மொத்தமாக கூடிய பிரபலங்கள்: இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் 8 சீசனின் போட்டியாளர்கள் சில பேர் மொத்தமாக படம் பார்க்க திரையரங்கிற்கு வந்தனர். அந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு சௌந்தர்யாவை பார்த்து மொட்டை ராஜேந்திரன் வாய்ஸ் போல இருக்கிறதே என கேட்டிருக்கிறார். அதற்கு ஜாக்குலின் உங்க வாய்ஸ் சூப்பராக இருக்கிறது. எங்க நீங்க ஒரு பாட்டு பாடி காட்டுங்களேன் என அந்த நிருபரையே கிண்டல் செய்துவிட்டு சென்றார் .
மொட்டை ராஜேந்திரன் வாய்ஸ் என்றதும் சௌந்தர்யாவுக்கும் ஷாக் ஆகிவிட்டது .என்னது மொட்டை ராஜேந்திரன் வாய்ஸா என கேட்டுக்கொண்டே அவரும் சென்று விட்டார். பத்திரிக்கையாளர்களுக்கு என ஒரு தர்மம் இருக்கிறது. ஆனால் அதை கெடுத்துவிட்டார்கள் என இந்த வீடியோவை பார்த்த பல பேர் கமெண்டில் கூறிவருகிறார்கள்.