×

கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட "ஜகமே தந்திரம்" ஸ்பெஷல் போஸ்டர்!

ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜகமே தந்திரம் படக்குழு

 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் என்ற படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து சென்ற மே 1ம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கினாள் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. இதற்கிடையில் OTT தளத்தில் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக வதந்திகள் பரவியது. ஆனால் படக்குழு திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என உறுதிப்படுத்தினர்.

எனிமும் கொரோனா லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறப்பட்டவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருக்கிறது. கடைசியாக வெளியான இப்படத்தின்  ‘ரகிட ரகிட ரகிட’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்ப்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறும் புகைப்படத்தை போஸ்டராக வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தால் லண்டனில் வரும் காட்சிகளில் ஐஸ்வர்யா லக்ஷ்மியின்  ரோல் படத்திற்கு முக்கியமானதாக இருக்கும் என யூகிக்கமுடிகிறது.


 


 

null


 

From around the web

Trending Videos

Tamilnadu News