ஓடிடியில் வெளியாகும் ஜகமே தந்திரம்? - அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் என்ற படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து சென்ற மே 1ம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. தற்போது வரை இப்படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் இல்லை.கொரோனா லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறப்பட்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜகமே தந்திரம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரிடையாக ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அதில் உண்மை இல்லை என்றும், ஜகமே தந்திரம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த செய்திகள் தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#JagameThandhiram is one of the most expected film of this year,heard that JT will release directly on Netflix,its seriously a saddened news fr everyone! Hope team will reconsider their decision and release the movie only in theatres! Waiting to witness suruli on big-screen💥🔥💥 pic.twitter.com/c3iHFRiAtS
— 𝐓𝐡𝐚𝐦𝐚𝐫𝐚𝐢𝐩𝐚𝐚𝐤𝐤𝐚𝐦 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐃𝐅𝐂 (@Thamarai_DFC) January 30, 2021