×

லுக்கே சும்மா தெறி மெர்சல்....கேஜிஎஃப் இயக்குனரின் ‘சலார்’ படத்தில் மாஸ் வில்லன்... 

 
salaar

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளில் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

prashanth

இப்படத்திற்கு பின் பாகுபலி படம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இப்படத்தி ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளார்.

jagapathi

இந்நிலையில், இப்படத்தில் தெலுங்கில் பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டிய ஜெகபதி பாபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை பிரசாந்த் நீல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் செம டெரரான தோற்றத்தில் ஜெகபதி பாபு இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஜெகபதி பாபு தமிழில் தாண்டவம், லிங்கா, பைரவா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்கள் வில்லனாக நடித்துள்ளார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News