கேமராமேன் கொடுத்து வச்சவர்.. ஜூம் பண்ணி பாக்கலாம்.. இலக்கியா பட விழாவில் ஜாக்குவார் தங்கம் நக்கல்...

டிக்டாக்கில் கவர்ச்சியாகப் பேசி கிளாமர் படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. இதனால், அவருக்கு எதிராகக் கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில், அவர் துரைராஜ் என்பவர் இயக்கும் நீ சுடத்தான் வந்தியா படத்தில் நடித்திருக்கிறார்.
படத்தின் போஸ்டர்கள், போட்டோக்களில் திரில்லர் ஜானரில் உருவாவதாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜாகுவார் தங்கம், `நீ சுடத்தான் வந்தியா படம் கில்மா படமா... இல்ல இல்ல கிளாமர் படமா என அண்ணன் பேரரசுகிட்ட கேட்டேன். இல்லப்பா திரில்லர் படம்னு அவர் சொன்னார். படத்தில் இலக்கியா நடிச்சிருக்காங்க. அவங்க சுடத்தான் வந்திருப்பாங்க. அவங்களைப் பாராட்டுவோம்.
உண்மையிலேயே படத்தின் டைரக்டர், ஹீரோ இவங்க எல்லாரையும் விட கேமரா மேன்தான் ரொம்ப கொடுத்து வைச்சவரு. அவருதான் எல்லாத்தையும் ஜூம் பண்ணிப் பாப்பாருன்னு சொன்னாங்க. நம்ம பார்க்க முடியாததை எல்லாம் பார்க்குற வகையில ஒளிப்பதிவு பண்ணி இருப்பாரு. விசாரிச்சா... அவரு வயசான மனுஷன்... ரொம்ப நல்ல மனுஷன்னு சொன்னாங்க. டைரக்டர் ரொம்ப சோகமாப் பேசுனாரு. நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்ல. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மாதிரி இந்தப் படம் நல்லா ஓடிடும். கவலைப்படாதீங்க. இலக்கியா எத்தனை பேரை சுட்டிருக்காங்கனு தெரியல’ என்று பேசினார்.