Categories: Cinema News latest news throwback stories

ஜெய்பீம் படத்தில் மிளகாய்தூள் தூவும் காட்சியை இப்படித்தான் எடுத்தோம்… அட செம ட்ரிக்கா இருக்கே!

Jai Bhim: தமிழ் சினிமாவில் 2021ம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் ஜெய் பீம். ஓடிடியில் ரிலீஸான இப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை சந்தித்த நிலையில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. அப்படத்தின் முக்கிய திருப்புமுனை காட்சி ஒன்றை இயக்குனர் இயக்கிய விதம் குறித்து நடிகர் மணிகண்டன் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்த திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். 

இதையும் படிங்க: சொன்னீங்களே செஞ்சீங்களா… விஜயகாந்த் விஷயத்தால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்!…

இத்திரைப்படம் காவல் நிலையத்தில் நடக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான வன்முறை குறித்து அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், லாக் அப் டெத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இப்படம் உண்மை சம்பவத்தினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தில் சூர்யா லாயர் சந்துருவாக நடித்திருப்பார். இருளர் சமயத்தினை சேர்ந்த ராஜாகண்ணுவாக மணிகண்டனும், செங்கேனியாக லிஜோமோலும் நடித்திருந்தனர்.

படத்தில் அனைவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தில் மணிகண்டனை போலீசார் அடித்து துவைப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர் உயிரிழந்து விடுவார். அவர் உயிர் இருக்கா என்பதற்கு அங்கிருந்த காவலர்கள் அவர் கண்ணில் மிளகாய் தூளை தூவி செக் செய்வார்கள். அந்த காட்சி பார்ப்பதற்கே மிரட்சியாக அமைந்து இருக்கும்.

இதையும் படிங்க: மீண்டும் வந்த மனோஜ் காதலி… ரோகிணி நினைக்கிறதெல்லாம் நடக்குதே… நல்லாவா இருக்கு!

அந்த காட்சியில் மணிகண்டன் எப்படி நடித்து இருப்பார் என்ற ஆவல் இருந்தது. அதுகுறித்து மணிகண்டன் பேசும் போது, கண்ணை எரிச்சலூட்டி சிவப்பாக்க பல வழிகளை யோசித்தோம். கிளிசரினை போடலாமா? சாக் பவுடர் பயன்படுத்தலாமா என்ற கேள்வி இருந்தது. கேமராமேன் அப்படி எதுவும் செய்ய வேண்டாம். கண்ணை விரிச்சு இருப்பது போல மட்டும் ஷாட் எடுத்தனர். மீதியை எடிட்டிங்கில் பார்த்து செய்தது தான் எனவும் மணிகண்டன் தெரிவித்து இருக்கிறார். 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily