Categories: Cinema News latest news

அஸ்வின் ரொம்ப பாவம்.! மிகுந்த வருத்தத்துடன் ஜெய் பீம் ஹீரோ.!

தனது திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்துள்ளார் மணிகண்டன் இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம், நெற்றிக்கண், காலா போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பிற்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது. ஆதலால், தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களும் மணிகண்டனின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர் என்றும் கூட சொல்லலாம்.

ஜெய்பீம் படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அப்படத்தின் மைய கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பவர் மணிகண்டன் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து நல்ல திரைப்படங்கள் ஆக நடித்து வருகிறார். அவரது, நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்” இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. தற்போது, இப்படம் வெளியாகி விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தை பற்றி மணிகண்டன் கூறுகையில், இப்படம் நல்ல திரைப்படம் நான்கு வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒன்றாக சந்திக்கின்றனர். பிறகு என்ன நடக்கும் என்பதுதான் கதை இப்படத்திற்கு வசனம் நான் தான் எழுதி உள்ளேன் என கூறியுள்ளார்.

அப்போது, நம்ம 40 கதை அஸ்வின் அவர்கள் மேடைப்பேச்சு பற்றி அவரிடம் கேட்கப்பட்டது அது பற்றிக் கூறுகையில் நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என சில நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை.

இதையும் படியுங்களேன்-

மீண்டும் தலையில் துண்டை போட்ட தியேட்டர் ஓனர்கள்.! தமிழக அரசால் நேர்ந்த கொடுமை.!

அப்படியான நேரத்தில் அவர் மாட்டிக் கொண்டு விட்டார். ‘அவர் மிகவும் பாவம்’ தெரியாமல் இதனை செய்துவிட்டார் என்பது போல் தெரிகிறது என்று தனது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.

Manikandan
Published by
Manikandan