Categories: Cinema News latest news Trailer

ஜி.வி.பிரகாஷின் ‘வெயில்’- ஸ்னீக் பீக் வீடியோ

வெயில், அங்காடித்தெரு போன்ற சிறப்பான படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் வெயில். இப்படத்தை கிரிக்கெஸ் சினி கி்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சி புகழ் அபர்ணநிதி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இப்படம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. ஒருவழியாக, இப்படம் டிசம்பர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இடம் பெற்ற சில காட்சிகளை ஸ்னீக் பீக் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ஜி.வி.பிரகஷை போலீசார் துரத்தி செல்வது போலவும், அவர் அபர்நதி வீட்டினுள் நுழைந்து அவருடன் சண்டை போடுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

கடந்த 3ம் தேதி ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவந்துள்ள நிலையில், மீண்டும் அவர் நடித்த ஜெயில் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா