Jailer 2 Box office: 19-வது நாளில் வசூலில் 69% சரிவை சந்தித்த ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் ரூ.800 கோடி வசூலை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதேநேரம், படம் வெளியாகி 19-வது நாளான திங்கட்கிழமை இந்திய வசூலில் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இரண்டாம் பாகத்தின் மீது ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. படம் வெளியான பிறகும் ரஜினியின் மாஸ் காட்சிகள், ஆக்ஷன் மற்றும் நெல்சனின் டார்க் காமெடி பாணி ஆகியவை ரசிகர்களிடம் கவனம் பெற்றன.
இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வெளியான நாள் முதலே நலல் வ்சூலை குவிக்க தொடங்கியது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் Sacnilk அடிப்படையில் வெளியாகியுள்ள trade estimates-ன்படி, நவம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி ஜெயிலர் 2 உலகளவில் சுமார் ரூ.812 கோடி Gross வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இதுவரை படம் சுமார் ரூ.459.70 கோடி Net வசூல் செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயிலர் 2’ ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
படம் வெளியாகி 19-வது நாளான திங்கட்கிழமை இந்தியாவில் சுமார் ரூ.3.40 கோடி Net வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை படம் இந்தியாவில் ரூ.11.20 கோடி Net வசூல் செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது திங்கட்கிழமை வசூல் சுமார் 69.6 சதவீதம் சரிந்துள்ளது.
வார இறுதி முடிந்து வேலை நாள் தொடங்கியதால் வசூலில் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் மூன்றாவது வாரத்திலும் படம் கோடிகளில் வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
