பாக்ஸ் ஆபீஸ் எம்பரர்!.. ஜெயிலர் 2 அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!..

 
jailer2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. 

2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயிலர் படத்தின் அடுத்த பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில், ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே இப்படம் உலகளவில் ரூ.125 கோடிக்கும் மேல் வசூலித்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ.317 கோடிக்கும் மேலும், உலகளவில் ரூ.540 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை படைத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் தற்போது கடந்த அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் வாரத்திலேயே ரூ.549 கோடி வசூலைக் கடந்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், ரூ.1000 கோடி வசூலை அடையுமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Tags

From Around the web