மூர்த்தி அண்ணன் மீம் மெட்டீரியல் ஆயிட்டாரே!.. செம கான்பிடண்ட்!...
சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடித்த தொடங்கியவர் நமோ நாராயணன். அதன்பின் பல படங்களில் நடித்திருந்தாலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 15ம் தேதி வெளியாகிய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில் மூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நமோ நாராயணன் நடித்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி முழுவதும் இவர்தான் ஆக்கிரமித்துள்ளார். இவரிடம் ரஜினி கார் ஓட்டுநராக வேலை செய்வது போல காட்சிகள் வருகிறது.. நமோ நாராயணன், ரஜினி, யோகி பாபு ஆகியோர் தொடர்பான காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது..

அதுவும் படத்தின் வில்லனாக வரும் சூரஜ் வெஞ்சரமுடுவுடன் நமோ நாராயணன் செஸ் விளையாடும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. எது குதிரை? எது ராஜா? எது ராணி என்று கூட தெரியாமல் கையில் கிடைத்ததை எடுத்து இவ்வளவுதான் ஆட்டம் என்று சொல்லிவிட்டு மூர்த்தி கதாபாத்திரம் கெத்தாக போகும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. அவன் எடுத்தது யானையும் கிடையாது. அடிச்சது ராஜாவும் கிடையாது.. ஆனா எவ்வளவு Confident-ஆ அடிச்சிட்டு போறான் பாரு என சூரஜ் வெஞ்சரமுடு பேசுவது ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில்ட் Confendence Level மீம் மெட்டீரியலாக மூர்த்தி அண்ணன் மாறியிருக்கிறார். ஒவ்வொரு டீமிலும் ஒவ்வொரு மூர்த்தி அண்ணன் இருப்பான் என பலரும் தங்களின் நண்பர்களுக்கு டேக் செய்து ஜாலி செய்து வருகிறார்கள்.
