விஜயை தாண்டுவாரா ரஜினி?!.. லியோ வசூலை முறியடிக்குமா ஜெயிலர்?..

 
jailer2


ரஜினி, சூரஜ் வெஞ்சரமுடு, எஸ்.ஜே.சூர்யா, நமோ நாராயணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. சிவ்ராஜ்குமார், மோகன்லால், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் ஒரு காட்சியில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். முதல் பாகம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் 2ம் பாகமும் சூப்பர் ஹிட் அடித்து இதுவரை உலகம் முழுவதும் 650 கோடி வசூலை அள்ளியிருக்கிறது.

தமிழகத்தில் ஜெயிலர் 2 திரைப்படம் நேற்றுவரை 180 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த வார இறுதிக்குள் மேலும் 70 கோடியை வசூலிக்கும் என்பதால் மொத்தமாக தமிழகத்தில் மட்டும் ஜெயிலர் 2 ரூ250 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் விஜயின் லியோ பட வசூலை ஜெயிலர் 2 முறியடிக்கும்.

அதாவது, தமிழகத்தை பொறுத்தவரை விஜயின் லியோ திரைப்படம் ரூ.226 கோடி வசூல் செய்ததுதான் அதிக வசூலாக இருக்கிறது.  அந்த சாதனையை ஜெயிலர் 2 முறியடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web