இங்க நான்தான் கிங்!.. வசூலில் புதிய சாதனை படைத்த ஜெயிலர் 2!..
74 வயதிலும் இன்னமும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய போது அவருடன் நடித்த பல நடிகர்களும் ரிட்டயர்ட் ஆகிவிட்டார்கள் அல்லது குணச்சித்திர நடிகர்களாக மாறிவிட்டார்கள்.
ஆனால் ரஜினி மட்டும் இன்னும் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார் . 2023ம் வருடம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூ.630 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது., இந்நிலையில்தான் ஜெயிலர் 2 உருவாகி கடந்த 15ம் தேதி உலகமெங்கும் வெளியானது..
படம் வெளியான முதல் நாளிலிருந்து இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வரவே படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. தற்போது படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.710.35 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
இதன்மூலம் 2018ம் வருடம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 2.0 திரைப்படம் ரூ.691 கோடி வசூல் சாதனையை ஜெயிலர் 2 திரைப்படம் முறியடித்திருக்கிறது. அதாவது ரஜினியின் சாதனையை ரஜினியே முறியடித்து கோலிவுட்டில் நான்தான் கிங என மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கிறார். நடிகர் விஜயின் எந்த திரைப்படமும் இந்த அளவுக்கு வசூலை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
