Jailer 2 Box Office Collection : பாக்ஸ் ஆபிஸ் கிங் ரஜினிதான்!.. 5 நாள் வசூல் அப்டேட்...

 

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

சூரஜ் வெஞ்சரமுடு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வில்லனாக நடித்திருக்க சிவ்ராஜ்குமார், மோகன்லால், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர். ஜெயிலர் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடுத்து வசூலை அள்ளிய நிலையில் ஜெயிலர் 2 படமும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துகொண்டே இருப்பதால் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது..

நான்கு நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் ரூ.400 கோடியை தாண்டிய நிலையில் தற்போது 5 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.477 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதில் இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூலாகியிருக்கிறது.
இதன் மூலம் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என ரஜினி மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

From Around the web