500 கோடியை தாண்டிய ஜெயிலர் 2 வசூல்!.. 5 நாள் கலெக்‌ஷன் அப்டேட்...

ஜெயிலர் 2 படத்தின் வசூல் என்னவென பார்ப்போம்..
 
jailer2
ஜெயிலர் 2


ரஜினியின் நடிப்பில் 2023ம் வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் அவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது. ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படம் உருவானது. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்திலும் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்திருக்க சூரஜ் வெஞ்சரமுடு மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் வில்லனாக நடித்திருந்தனர்.

இதுபோக, மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான முதல் நாளிலிருந்து ஜெயிலர் 2 திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது..

இந்நிலையில், படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.546 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.287 கோடி வசூல் செய்திருக்கிறது.

Tags

From Around the web