Jailer 2 Movie Updates: ஷாருக்கும் வேண்டாம்...ஹிர்த்திக்கும் வேண்டாம்: ஜெயிலர் 2வில் நெல்சன் எடுத்த முடிவு

ரஜினி நடிப்பில் செப்டம்பரில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ்
 
jailer 2 update

ரஜினி நடிப்பில் செப்டம்பரில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ 600  கோடி வரை வசூல் செய்தது.  இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வந்தது.

நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவு பெற்றது. முதல் பாகத்தில் கேமியோ வேடங்களில் மோகன்லால், சிவ்ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர்  நடித்திருந்தனர். அவர்கள் படத்தில் வரும் காட்சிகள் அதிரடியாக இருந்தன. ரசிகர்களும் கொண்டாடினார்கள். இதையடுத்து  2ம் பாகத்திலும்  கேமியோ ரோலில் நடிக்க முதலில் ஷாருக்கானிடம் பேசப்பட்டது. அவர் நடிக்க மறுக்கவே பவன் கல்யாணிடம் பேசினார்கள். ஆனால் அவரிடமிருந்து சரியான பதில் இல்லாததால் இறுதியாக ஹிர்த்திக் ரோஷனிடம் பேசினார்கள்.

jailer 2 update

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளாராம். இனி யாரையும் கேட்க வேண்டாம் என எண்ணி அந்த கேமியோ வேடத்தையே கதையிலிருந்து தூக்கி விட்டாராம். 

Summary:

 Jailer 2: Director Nelson Takes a Bold Decision on Cameo Role for Rajinikanth's Movie

From Around the web