Jailer2: எல்லாமே பொய்!.. ஜெயிலர் 2 உண்மையான வசூல் இதுதான்!..
சமீப காலமாகவே ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த படம் முதல் நாளே இவ்வளவு கோடி வசூல் செய்தது, இரண்டாம் நாள் இவ்வளவு கோடி, மூன்றாம் நாள் இவ்வளவு வசூல் என்றெல்லாம் செய்திகள் வெளியாவதுண்டு.
சில இணையதளங்கள் அப்படி செய்தி வெளியிடுவதை நம்பி முக்கிய ஊடகங்களும் அதை செய்திகளாக வெளியிடுகின்றன. எனவே அதை ரசிகர்களும் நம்புகிறார்கள். ஆனால் உண்மையான வசூலுக்கும், செய்திகளில் வெளியாகும் வசூலுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கும்.
அதுபோல்தான் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ.541 கோடி வரை வசூல் செய்து விட்டதாகவும், இந்தியாவில் இந்த திரைப்படம் ரூ.290 கோடி வரை வசூல் செய்து விட்டதாகவும் இன்று காலை செய்திகள் வெளியானது.
பல ஊடகங்களும் இந்த செய்தியாக வெளியிட்டன. ஆனால், அது உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ‘ஜெயிலர் 2 ரூ.550 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியாகும் செய்தி முழுக்க முழுக்க பொய்.. அது உண்மை இல்லை.. நேற்றுவரை ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.470 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தில் ரூ. 122 கோடியை இந்த படம் வசூல் செய்திருக்கிறது. இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.500 கோடியை வசூலிக்க வாய்ப்பிருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.
