ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்!.. கொண்டாடிய படக்குழு!.. வைரல் போட்டோஸ்!..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து ஏற்கனவே வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பற்றி 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரஜினியின் நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக ஜெயிலர் இருக்கிறது.
இந்த படத்தில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவ்ராஜ்குமார் என பலரையும் கொண்டுவந்து கேமியோ வேடத்தில் நடிக்க வைத்திருந்தனர். அவர்கள் சில நிமிடங்கள் நடித்திருந்தாலும் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜெயிலர் படம் நல்ல வசூலை பெற்றது..
இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உருவாக்கியது/ கடந்த பல மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த படத்தில் யோகி பாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்தனர். இந்த படத்திலும் மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் கேமியோ செய்திருக்கிறார்கள். மேலும் கேமியோ வேடத்தில் ஷாருக்கானை நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நடிக்கவில்லை என்பதால் பவன் கல்யாணை வைத்து அந்த காட்சிகளை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
பல மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறது., இதை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
