jailer
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் நெல்சன் இப்படத்தை இயக்கியிருந்தார். நெல்சனின் பீஸ்ட் திரைப்படம் ட்ரோலுக்கு உள்ளான போதும், அவர் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்தார்.
அதேபோல், அண்ணாத்த, தர்பார் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில் ரஜினிக்கும் ஒரு சூப்பர் ஹிட் படம் தேவைப்பட்டது. ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா, தமன்னா, மோகன்லால், சிவ் ராஜ்குமார், சஞ்சய் தத், மலையாள நடிகர் விநாயக், தெலுங்கு நடிகர் சுனில் என பலரும் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: பீஸ்ட் படம் தோல்வியடைய காரணம் இவங்கதானாம்!.. ஒருவழியா வெளியே வந்த உண்மை!… தளபதி இல்லையாம்!
ரஜினிக்கு ஏற்ற ஆக்ஷன் காட்சிகள் இருந்ததால் இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே, படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் வசூல் அதிகரித்து இப்படம் இதுவரை கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ரூ.450 கோடி வரை வசூலித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் ஜெயிலர் படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேபோல், ஆந்திரா, கர்நாடகாவிலும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது. இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் படத்துல வரும் அந்த வசனம் தனுஷுக்குதான்!.. தலைவரின் மைண்ட் வாய்ஸை சொன்ன இயக்குனர்…
குறிப்பாக வெளிநாடுகளில் ஜெயிலர் படம் வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அங்கு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஜெயிலர் திரையிடப்பட்டுள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர்கள் அங்கு அதிகம் வசிப்பதால் அவர்கள் கூட்டம் கூட்டமாக சென்று இப்படத்தை பார்க்கிறார்களாம். அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் டாலருக்கும் மேல் இப்படம் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. சில மூவி ட்ராக்கர்ஸ்கள் அமெரிக்காவில் இப்படம் 5 மில்லியன் டாலரை தாண்டும் என சொல்கிறார்கள். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: உள்ள கூட விடல!.. பிரசாந்த் பட விழாவில் அசிங்கப்பட்ட விஜய்!.. அப்ப வந்த வெறி!…
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…