jailer
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு எப்போதும் போட்டி நடிகராக இருப்பது கமல் மட்டுமே. அல்லது ரஜினி தன்னுடையை போட்டி நடிகராக நினைப்பது கமல்ஹாசனை மட்டுமே என்று சொன்னால் இன்னும் பொறுத்தமாக இருக்கும். இந்த போட்டி இப்போது துவங்கியது இல்லை. ரஜினி நடிக்க துவங்கிய காலத்தில் இருந்து இருப்பது.
துவக்கத்தில் இணைந்து நடித்த ரஜினியும் கமலும் ஒரு கட்டத்தில் பிரிந்து தனித்தனியாக நடிக்க துவங்கினார். ரஜினி ஆக்ஷன் கதைகளில் நடித்து சூப்பர்ஸ்டாராக மாற கமல்ஹாசன் வேறுமாதிரி கதைகளில் நடித்தார். அதில், அதிகம் காதல் படங்கள் இடம் பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் தான் நடிக்கும் படங்களில் பரிசோதனை முயற்சிகளையும் கமல் செய்து பார்த்தார். அதனால், கமல் ஒரு நல்ல கலைஞன் மற்றும் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டார்.
இதையும் படிங்க: எல்லா ஏரியாலயும் நாங்க கில்லி!.. ஆந்திராவில் பல கோடிகளை வசூலித்த டாப் தமிழ் படங்கள்!..
ஆனால், ரஜினி கமர்சியல் மசாலா ஹீரோவாக இருந்தாலும் வசூலை குவிக்கும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறினார். ரஜினி பட வசூலை கமலின் படங்களால் தொடமுடியவில்லை. அதேநேரம் கமலின் நாயகன், தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற சில படங்களும் நல்ல வசூலை பெற்று களத்தில் நானும் இருக்கிறேன் என ரஜினிக்கு காட்டினார் கமல்.
சந்திரமுகி படத்திற்கு பின் ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா, லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம் எந்திரன், 2.0 ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்றது. பேட்ட படம் சுமாரான வெற்றியை பெற்றது. ஆனால், லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடி வசூலை தொட்டது. கமல் நடித்த படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் இது. அதோடு, கமலும் பாக்ஸ் ஆபிஸ் கிங்தான் என தியேட்டர் அதிபர்களுக்கு காட்டிய படமாக விக்ரம் அமைந்தது. இதன் மூலம் ரஜினிக்கு சக போட்டியாளர் நான்தான் என நிரூபித்தார் கமல்.
இதையும் படிங்க: கடந்த 3 வருடங்களாக தியேட்டர்களை வாழ வைத்த 3 நடிகர்கள்.. 3 படங்கள்!…
இந்த நிலையில்தான் கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விக்ரம் படம் வசூல் செய்த ரூ.400 கோடியை 6 நாளில் வேகமாக எட்டிப்பிடித்துவிட்டதாக தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் இப்படம் ரூ.500 கோடியை தாண்டிவிடும் எனவும் கணிக்கப்படுகிறது.
மொத்தத்தில் ஜெயிலர் வெற்றி மூலம் தான் சூப்பர்ஸ்டார் என மீண்டும் ரஜினி நிரூபித்துள்ளார்!..
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…