Connect with us
rajini

Cinema News

நீங்க என்ன சொல்றது.. நான் சொல்றேன்! ‘ஜெய்லர்’ நல்ல படம்னு சொல்லமுடியாது – பிரபல தயாரிப்பாளர் கருத்து

ரஜினி நடிப்பில் ரசிகர்களின் பேராதாரவை பெற்று வரும் திரைப்படம் ஜெய்லர். இந்தப் படம் வெளியானதில் இருந்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதிகிறது. படத்தை பார்க்க அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ஆர்வமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

படம்  முழுக்க ரஜினியை மாஸாக காட்டியிருக்கிறார் நெல்சன். ஆனால் காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் டார்க் காமெடியில் பின்னி பிடலெடுத்திருக்கிறார் நெல்சன். அனைத்து கதாபாத்திரங்களையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.

இதையும் படிங்க : சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலுவின் அட்ராசிட்டி!.. ரெடியா இருங்க மக்களே!…

மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் படத்தில் சிறிது நேரமே தோன்றினாலும் அவர்கள் வந்து போன தாக்கம் மக்கள் மனதில் நின்று பேசுகின்றது.அந்த அளவுக்கு அவர்களை அழகாக பயன்படுத்தியிருக்கிறார்.

கமலுக்கு விக்ரம் படம் எந்த மாதிரியான மாஸை கிரியேட் பண்ணியதோ அதே அளவு ரஜினிக்கும் இந்தப் படம் அமையும் என்று நினைத்து தான் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்தனர். ஆனால் படத்தில் ஆங்காங்கே விக்ரம் படத்தை நியாபகப்படுத்துவது மாதிரியான காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உன்னை கொல்லாம விடமாட்டேன் என்று நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் போட்ட சபதம் இந்தப் படத்தில் அதற்கான விஷயம் எதாவது இருக்கும் என பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம் தான்.

இதையும் படிங்க : சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த விஜய்!.. ஒரேயொரு படம் தான்!.. விஜய்யோட டோட்டல் பாக்ஸ் ஆபிஸும் காலி!..

23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்த ரஜினியையும் ரம்யா கிருஷ்ணனையும் காட்டும் நெல்சன் அவர்களுக்குள் எதாவது ஒரு ப்ளாஷ் பேக் கதையை வைத்திருக்கலாம். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் ஜெய்லர்  படத்தை பற்றி அவருடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

அதாவது ஜெய்லர் திரைப்படம் நல்ல படம்னும் சொல்ல முடியாது, மோசமான படம்னும் சொல்ல முடியாது. படத்தின் கதையை படமுழுக்க ரஜினி சுமந்திருக்கிறார் என்றும் இன்னும் படத்தில் கொஞ்சம் உழைச்சிருக்கலாம் என்றும் கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top