Categories: Cinema News latest news throwback stories

ஜெயிலர் பட கதையே காப்பி தானா? அதுவும் இந்த தமிழ் படமா? கசிந்த ஆச்சரிய தகவல்..!

Jailer: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை சமீபத்தில் நடத்திய படம் ஜெய்லர். இப்படத்தின் வசூலை முந்திவிட லியோ திரைப்படம் பெரிய ஆசையில் இருக்கிறது. இதனை அடுத்து இன்று படமும் ரிலீஸாக விட்டது. அந்த பிரச்னை ஒரு புறம் இருக்க ஜெயிலர் படமே காப்பி தான் தெரியுமா?

ஜெயிலர் படத்தில் மகன் தவறான வழியில் செல்வதை தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் அவருக்கு அறிவுரை சொல்லுவார். அடுத்து சரண்டர் ஆகிவிடு எனவும் கூறுவார். ஆனால் அவர் தொடர்ந்து மறுக்கவே வேறு வழியில்லாமல் சுட்டு விடுவார். இந்த கதையை சிவாஜி 50 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்து விட்டார்.

இதையும் படிங்க: லியோ விமர்சனம்.. ஐயா லோகேஷ் இதுதான் உன் 100 சதவீதமா?.. பாவம் சார் விஜய்!

அந்த படம் தான் தங்கப்பதக்கம். காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிவாஜி தன் மகன் தவறான வழியில் செல்வதை தெரிந்து கொள்வார். அவர் திருத்த நிறைய முறை முயற்சி செய்து கடைசியில் முடியாமல் போகவே தன் மகனையே சுட்டுவிடுவார். 

சென்னையில் நடிகர் செந்தாமரையால் போடப்பட்ட நாடகம் தான் ‘இரண்டில் ஒன்று’. இந்த நாடகத்தினை நேரில் பார்க்க வந்த சிவாஜி இது தனக்கான கதை என்பதை முடிவு செய்தாராம். உடனே செந்தாமரையை அழைத்த சிவாஜி அப்பா கேரக்டரில் சில மாற்றங்களை சொன்னாராம்.

இதையும் படிங்க: இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?!.. நடிகர்களை மொத்தமா வேஸ்ட் பண்ன லோகேஷ் கனகராஜ்!…

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily