Categories: Cinema News latest news throwback stories

நடிகையை தொட்டு நடிக்க கூச்சப்பட்ட ஜெய்சங்கர்!.. காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞனாக வலம் வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜெய்சங்கர். சட்டம் படிக்க குடும்பத்தார் ஆசைப்பட சினிமா தான் முக்கியம் என்று படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு நாடகக் கம்பெனியில் சேர்ந்தார் ஜெய்சங்கர்.

jai1

இவரின் சினிமா துறை பயணம் கொஞ்சம் கஷ்டமானது தான். இரு மாபெரும் சக்திகளாக சினிமாவை ஆண்டுக் கொண்டிருந்த சமயத்தில் துணிச்சலாக தன் முதல் படத்திலேயே அவர்களை நேர்கொண்டவர் ஜெய்சங்கர். இரவும் பகலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெய்சங்கர்.

இதையும் படிங்க : விஜய் அரசியலுக்கு வரணும்ன்னா இவ்வளவு கோடி செலவு செய்யனும்!! துள்ளியமாக கணக்கு போட்ட பிரபல பத்திரிக்கையாளர்…

அதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பல நாடகங்களை பார்த்து எம்ஜிஆரும் பாராட்டியிருக்கிறார். இரவும் பகலும் படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்தவர் வசந்தா. நடிகை வசந்தா அந்த சமயத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தார்.

jai2

ஜெய்சங்கருக்கு இரவும் பகலும் முதல் படமானாலும் வசந்தாவிற்கு ஏற்கெனவே சினிமா பழக்கமானதாகவே இருந்தது. அதற்கு முன் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை வசந்தாவை ஒரு டூயட் பாடல் காட்சியில் தொட்டு நடிக்க வேண்டிய கட்டாயம் ஜெய்சங்கருக்கு ஏற்பட்டது.

ஆனால் ஜெய்சங்கருக்கு மிகவும் கூச்சமாக இருந்ததாம். தொடவே ரொம்ப யோசித்தாராம். அதற்கு காரணம் வசந்தா ஜெய்சங்கருக்கு நடிப்பில் சீனியர் என்பதாலும் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பதாலும் ஜெய்சங்கருக்கு முதல் படம் என்பதாலும் மிகவும் சங்கோஜப்பட்டு தான் நடித்தாராம். இப்ப கூட அந்த படத்தில் உள்ள பாடலை பார்த்தாலும் ஜெய்சங்கர் ஏதோ மாதிரி போல் தான் இருப்பார் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

jaishankar vasantha

இந்த வசந்தா தான் ஏராளமான படங்களில் நடிகர்களுக்கும் அம்மாவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருப்பார். நானே ராஜா நானே மந்திரி திரைப்படத்தில் விஜயகாந்திற்கு அம்மாவாகவும் இவர் தான் நடித்தார்.

மேலும் இரவும் பகலும் படம் ஒரு பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என தெரிவித்த நிலையில் இந்த படத்தோரு எம்ஜிஆரின் எங்கள் வீட்டு பிள்ளை படமும் சிவாஜியின் பழனி படமும் ஒன்றாக வெளியானது. இருந்தாலும் இரவும் பகலும் படத்திற்கு அமோக வெற்றியும் கிடைத்தது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini