Categories: Cinema News latest news throwback stories

என்னைய வச்சி படம் எடுத்தா அவ்வளவுதான்!.. வந்த தயாரிப்பாளரை திருப்பி அனுப்பிய ஜெய்சங்கர்…

தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு என்ற பெயரை பெற்ற ஜெய்சங்கர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தன்னுடைய வசீகரமான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தை வென்றவர். குறிப்பாக ஜெய்சங்கர் என்ற பெயரை கேள்விபட்டாலே அவர் நடித்த Cowboy வகையரா திரைப்படங்களே நமக்கு ஞாபகம் வரும்.

அனைத்து டாப் நடிகர்களுக்கும் ஒரு நாள் மார்க்கெட் இல்லாமல் போவது இயல்புதான். அந்த வகையில் ஒரு கட்டத்தில் ஜெய்சங்கருக்கும் ஹீரோ மார்க்கெட் சரிந்துபோனது. அந்த சமயத்தில் ஒரு தயாரிப்பாளர், ஜெய்சங்கரை அவரது திரைப்படத்திற்கு ஹீரோவாக ஒப்பந்தம் செய்ய அவரது வீடு தேடி வந்தாராம்.

இப்படி ஒரு நடிகரா?…

“என்னிடம் ஒரு திரைப்படத்தை படமாக்கி முடிப்பதற்கான வசதி இருக்கிறது. நீங்கள் என்னுடைய படத்தில் நடித்தால் மட்டும் போதும். அவ்வளவுதான்” என கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு ஜெய்சங்கர், “நீங்கள் இப்போது படம் தயாரிக்க வேண்டாம். நான் சொல்லும்போது நீங்கள் படம் எடுங்கள். இப்போது போய் வாருங்கள்” என்று கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டாராம்.

அப்போது அவரது நண்பர் “ஏன் அவரை திருப்பி அனுப்புவிட்டீர்கள்? அவர் மிகவும் நல்ல தயாரிப்பாளர்” என கூறியிருக்கிறார். அதற்கு ஜெய்சங்கர், “அவர் நல்ல தயாரிப்பாளர் என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்போது எனக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. எனக்கு மார்க்கெட் இல்லாத சூழ்நிலையில் அவர் என்னை வைத்து படம் எடுத்தார் என்றால் நிச்சயமாக நஷ்டம்தான் வரும். நமக்கு பணம் வருகிறது என்பதற்காக அவருடைய படத்திலே நாம் நடிப்பது எந்த விதத்தில் நியாயம்” என கூறினாராம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகரா? என்பதை கேள்விபடும்போது வியப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: 40 லட்சம் போட்டு உருவாக்கிய வீட்டை ஒரே நொடியில் உடைத்து எறிந்த தயாரிப்பாளர்… ஏன் இப்படி!

Arun Prasad
Published by
Arun Prasad