ஜேம்ஸ் வசந்தனின் சோளக்கொள்ளை பொம்மை டிரைலர் வெளியானது.. என்ன கதை தெரியுமா?..

 
james

மிராக்கிள் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள புதிய தமிழ் சிறுவர் திரைப்படமான சோளக்கொல்லை பொம்மை’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சிறுவர் கற்பனை மற்றும் சாகசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாயாஜால கற்பனையும் குழந்தைகளின் அப்பாவித்தனமும் இணைந்த சுவாரஸ்யமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் சாகசம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் கலந்த கதையாக ‘சோளக்கொல்லை பொம்மை’ உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த படத்தில் குழந்தை கதாநாயகனாக கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். அவருடன் நடிகர் சிங்கம் புலி மற்றும் தாமரை செல்வி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன், அந்தப் படத்தின் பாடல்கள் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக “கண்கள் இரண்டால்” பாடல் இன்று வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாடலாக உள்ளது.

இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகர், பேச்சாளர் மற்றும் இயக்குநராகவும் பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது சிறுவர் கற்பனை மற்றும் சாகச திரைப்படமான ‘சோளக்கொல்லை பொம்மை’ படத்தை இயக்கி இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

திரையரங்குகளில் வெளியாகத் தயாராகவுள்ள ‘சோளக்கொல்லை பொம்மை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வித்தியாசமான கற்பனை உலகம், குழந்தைகளின் சாகச பயணம் மற்றும் மாயாஜால அம்சங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags

From Around the web